| 
      
      
         | 
      
      
         | 
      
      
         வனவியல்   | 
      
      
         | 
      
      
        மரப்பயிர்களில் விதையில்லாப் பெருக்கம்   | 
      
      
        | முதிர்ந்தத் தண்டுத்துண்டுகள், முதிரா இளம் போத்துகள் மற்றும் இளசான  தண்டுத்துண்டுகள் மூலமாக வேம்பில் வெறிகரமாக பயிர்பெருக்கம் செய்யலாம். இந்த தண்டுத்துண்டு  வகைகளை வெயில் காலங்களில் எளிதில் சேகரிக்கலாம்.  | 
      
      
         | 
      
      
        அ. முதிர்ந்த தண்டுத்துண்டுகள்  
வீரியமாக வளரும் 1-2 செ.மீ விட்ட அளவு தண்டுத்துண்டுகளை எடுக்க வேண்டும். முளையிலிருக்கும்  இலைகளை நீக்கி தண்டுத்துண்டுகளை 15-50 செ.மீ நீளமானதாக்க  வேண்டும். தண்டுத்துண்டுகளின் அடிப்பகுதியை 1000 பி.பி.எம்.  ஐ.பி.ஏ கலவையில் முக்க வேண்டும். ஆனால் வேர்விடும் சதவீதம் குறைவாகத்தான்  இருக்கும். 
ஆ. முதிரா இளம் போத்துகள்:  
விடியற்காலையில் செழிப்பான தண்டுத்துண்டுகளை சேகரித்து 10-15  செ.மீ அளவு வெட்டி முளையில் மட்டும் இரண்டு  இலைகளை மட்டும் விட்டுவிட்டு மீதி இலைகளை கிள்ளி விட வேண்டும். இதை 2000  பி.பி.எம். ஐ.பி.ஏ.  கலவையில் முக்கி பிற்பாடு நட  வேண்டும். இம்முறையில் வேர்கள் 6 - 8  வாரங்களில் நன்கு வளரும். 
இ. இளசான தண்டுத்துண்டுகள்    
காலையில் செழிப்பான தண்டுத்துண்டுகளை எடுத்து முளையிலிருக்கும் பகுதியை 4 – 7  செ.மீ அளவு வெட்டி மண்புழு உர ஊடகத்தில் அல்லது  பருமணல் ஊடகத்தில் நட்டு பனிப்புகை அறையில் வைத்து  விட வேண்டும். தண்டுத்துண்டுகள் நான்கு வாரங்களில் வேர் விட்டு விடும். இதை நடவு  வயலில் நடுவதற்கு முன் நன்கு கடினப்படுத்த வேண்டும்.  | 
      
 
     
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
        |   | 
      
      
         | 
      
      
        
            © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016 
          |